Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 5.00

ஜுலை 05, 2023 11:06

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5 ஆனது. 4 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இதில் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

கடந்த 30ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. 1ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 5.40 ஆனது. கடந்த 2ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ. 5.30 ஆனது. 3ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின்  விலை 5.20 ஆனது. 

ஜுலை 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்