Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி

ஜுலை 04, 2023 01:16

திருச்செங்கோடு: திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி உதயா ஸ்போர்ட்ஸ் கிளப், திருச்செங்கோடு ஒன்றிய திமுக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு தலைவர் தங்க கோப்பை கபடி போட்டி தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஏ கிரேடு கபடி போட்டி கடந்த 30ம் தேதி தொடங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் நடந்தது.

கபடி போட்டி இறுதி கட்டத்தை எட்டியது லீக் முறையில் நடந்த போட்டிகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் கலா எட்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று காலை முதல் நடந்த கால் இறுதிப் போட்டிகளில் ஆண்கள் அணியில் வெற்றி பெற்ற பெங்களூர் கஸ்டம்ஸ் அணி, வேல்ஸ் யுனிவர் சிட்டி அணி, பேங்க் ஆப் பரோடா, ஜேகே அகாடமி ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தேர்வு பெற்றன. இதே போல் பெண்கள் பிரிவில் எஸ் எம் வி கே சி ஒட்டன்சத்திரம் அணி, திருவாரூர் மாவட்டம் திட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி,  பி கே ஆர் கோபி அணி, நேஷனல் பெங்களூர் அணி ஆகியவை அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

தொடர்ந்து நடந்த ஆண்கள் பிரிவு அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் கஸ்டம் அணியும் வேல்ஸ் யுனிவர்சிட்டி சென்னை அணியும் மோதின.

இதில் பெங்களூர் கஸ்டம்ஸ் அணி 38 க்கு 34 என்ற புள்ளிகளை பெற்று வேல்ஸ் யுனிவர்சிட்டி அணியை வீழ்த்திஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல் மற்றொரு அரைஇறுதிப் போட்டியில் விளையாடிய பேங்க் ஆப் பரோடா அணியும், ஜேகே அகாடமி கேரளா அணியும்  மோதினார்கள்.

இதில் பேங் ஆப் பரோடா அணி 33:28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போல் பெண்கள் பிரிவில் எஸ் எம் வி கே சி ஒட்டன்சத்திரம் அணி 51 க்கு 30 என்ற புள்ளி கணக்கில் ஜேகே அகாடமி  நேஷனல் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் மற்றொரு போட்டியில் பி கே ஆர் கோபி அணி, திருவாரூர் கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 37 க்கு 18 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் எஸ் எம் வி கே சி ஒட்டன்சத்திரம், பி கே ஆர் கோபி ஆகிய அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த போட்டியில்  எஸ்எம்விகேசி அணி 35:33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. தோல்வியடைந்த பிகேஆர் அணிக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் கஸ்டம்ஸ் பெங்களுரு அணியும் பேங்க் ஆப் பரோடா பெங்களூரு அணியும் மோதினார்கள். இதில் பேங்க் ஆப் பரோடாஅணி 49:43 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. கஸ்டம்ஸ் பெங்களுரு அணிக்கு 2 ஆம் பரிசு கிடைத்தது.

உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும் ஒன்றிய திமுக செயலாளர் அட்மா தலைவருமான தங்கவேல் தலைமையில்  போட்டிகளில் முதல் பரிசு பெற்ற ஆண் பெண் அணிகளுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இரண்டாம் பரிசு பெற்ற அணிகளுக்கு தலா ரூ.75,000ம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு பெற்ற அணிகளுக்கு தலா ரூ50,000ம் கால் இறுதியில் வெற்றி பெற்ற  அணிகளுக்கு தலா ரூ.10,000 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர், ரைடர், ஆல்ரவுண்டர் என தனித்தனியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்