Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி: ஏ.கே.பி சின்ராஜ் எம்பி பங்கேற்பு

ஜுலை 04, 2023 12:39

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

இதில் மூன்றாவது நாளாக நடைபெற்ற கால் இறுதி போட்டியின் போது, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்  A.K.P.சின்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்களுக்கான போட்டியினை துவங்கி வைத்தார்.

மேலும் கால் இறுதி போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி.ராஜவேல், மத்திய மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில், திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், உதயா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்