Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 மாவட்ட அளவிலான போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் முதலிடம்

ஜுன் 26, 2023 11:31

குமாரபாளையம்: போலீசார் சார்பில் நடத்தப்பட்ட 4 மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

அதனை தொட்ர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் சரக போலீசார் சார்பில் கட்டுரை போட்டிகள் சேலம் சரக டி.ஐ.ஜி.யும், முன்னாள் முதல்வர் காமராஜ் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியுமான ராஜேஸ்வரி உத்திரவின் பேரில் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் மனமகிழ் மன்ற மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகளை இன்ஸ்பெக்டர் தவமணி துவக்கி வைத்தார். இதனை எஸ்.ஐ. தங்கவடிவேல் கண்காணிப்பு அலுவலராக இருந்து போட்டியயை நடத்தினார். நான்கு மாவட்டங்களில் சுமார் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 

இந்த போட்டியில் எனது முன் மாதிரி (அ) எனது வழிகாட்டி, என்ற தலைப்பில் பேசிய குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மேகவர்ணா, எனது குறிக்கோள் (அ) எனது லட்சியம் என்ற தலைப்பில் பேசிய இதே பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சுதக்சனா, குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் பேசிய இதே பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் இலக்கியா, ஆகியோர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். 

மேலும் நான்கு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளை பாராட்டிய டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, இவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். சாதனை படைத்த மாணவியர்களை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் மற்றும் விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்