Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச யோகா தினவிழா

ஜுன் 23, 2023 06:00

நாமக்கல்: தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக பள்ளியின் தலைமையாசிரியர் செ.தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்ட இத்தினத்தில் புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

மேலும் சிறப்பு விருந்தினராக இறையமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜி.அருள்குகன் கலந்து கொண்டு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், பயன்படுத்துவோருக்கு கூறவேண்டிய அறிவுரைகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி புகையிலை எதிர்ப்பு தின ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து சர்வதேச யோகாதினம் பள்ளியின் சாரண இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் கா.லட்சுமி, ச.விமலா, சி.கவிதா, சு.பிரபு, து.விஜய், பொ.நித்யா, சா.கீதா, ஜனனி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்