Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாட்டு சந்தையில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு 3.50 கோடி வர்த்தகம்

ஜுன் 23, 2023 05:40

சேந்தமங்கலம்: மாட்டு சந்தையில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு 3.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் மாட்டு சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு வியாபாரம் துவங்கி, மாலை 3 மணி வரை மாடுகளின் வாத்தகம் நடந்தது. 

மாட்டு சந்தையில் இந்த வாரம் கொல்லிமலை, சேலம், நாமக்கல், பெம்முடி, கூடமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை, சிந்து மாடுகளின் வரத்து அதிகரிப்பு, இதனால் இறைச்சி மாடுகளின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. 

மேலும் இறைச்சி பசு மாடுகளின் விலை 25 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரத்திற்கும் விற்பனையானது. எருமை மாடுகளின் விலை 40 ஆயிரத்திலிருந்து 48 ஆயிரம் ரூபாய்க்கும், கன்று குட்டிகளின் விலை 10 ஆயிரத்திலிருந்து 13,500 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. 

இங்கு காளை மாடுகள், வளர்ப்பு பசு, வத்தகறவை, பால் மாடுகளின் விலை 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ப்பு பசு, எருமை கன்று குட்டிகளின் விலை 12 ஆயிரத்திற்க்கும் விற்பனையானது. மேலும் காளை மாடுகள், ஜல்லிகட்டு காளை மாடுகள் 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் வரை விற்பனையானது.

அதனை தொடர்ந்து இந்த வாரம் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் காளை, சிந்து மாடுகளின் வரத்து அதிகரித்து, விலை உயர்ந்து 3.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

கேரளா, பெங்களூர் மாநிலம், ஆத்துார், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்கவும், விற்கவும் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் புதன்சந்தை மாட்டு சந்தையில் கூடினர்.

தலைப்புச்செய்திகள்