Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசு

ஜுன் 22, 2023 04:12

வாஷிங்டன் டி.சி: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.

இதன் பின்பு, இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர். 

இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார்.

பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட வைரத்தின் ரசாயன மற்றும் ஒளி பண்புகளை இந்த வைரம் பிரதிபலிக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இருக்கும். 

 

தலைப்புச்செய்திகள்