Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திறமையை நான் வளர்த்துக் கொள்வேன்: அதிதி

ஜுன் 20, 2023 08:56

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்து வரும் அதிதி. தற்போது அந்த படத்தில் இடம் பெறும் ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார்.

முறைப்படி இசை கற்றுள்ள அதிதி நடிக்க வருவதற்கு முன்பே தமன் இசையில் ‘ஞானி’ படத்தில் பாடிய ‘ரோமியோ ஜூலியட்’ பாடல் ஹிட்டானது.

அப்பா இயக்கும் படத்தில் நடிப்பீர்களா? பாடுவீர்களா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் ‘எனது அறிமுகத்திற்கு அப்பாவின் பெயர் தேவைப்பட்டது உண்மைதான்.

இனி நான் என் திறமையால் தான் வாய்ப்புகளை பெற வேண்டும். அப்பா என்பதற்காக நடிக்கவோ, பாடவோ அவரிடம் வாய்ப்பு கேட்க மாட்டேன். இரண்டுக்குமே அவர் என்னை அழைக்க வேண்டும். அதற்குரிய திறமையை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்’என்றார் அதிதி.

தலைப்புச்செய்திகள்