Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஜுன் 20, 2023 03:18

இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடிப்பில் ராமாயணத்தை மையமாக கொண்டு கடந்த 16ம் தேதி வெளியான “ஆதிபுருஷ்” படத்தை தடை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், இந்த திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ராமர் மற்றும் ஹனுமான் ஆகியோரின் படத்தை தெளிவாக அவதூறு செய்கின்றன. ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ராமரையும், ராவணனையும் கூட வீடியோ கேமின் கதாபாத்திரமாக சித்தரிக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி இந்தப் படத்தை திரையிடுவதை நிறுத்தவும், இனி வரும் காலங்களில் திரையரங்குகள் மற்றும் OTT தளங்களில் ஆதிபுருஷம் திரையிடுவதை உடனடியாகத் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.
இந்து மத உணர்வுகளை புண்படுத்திய இயக்குனர் ஓம் ரவுத், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட ஒரு கேவலமான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடாது எனவும், ராமர் மற்றும் ராமாயணத்தின் மீதான நமது நம்பிக்கையின் முழுமையான பேரழிவு இது என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

தலைப்புச்செய்திகள்