Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாமன்னன் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டது

ஜுன் 20, 2023 02:42

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ்  இயக்கிவருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆனது. படத்தின் சிறப்பான ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் வெளிநாடு வியாபாரம் இப்போது தொடங்கியுள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய வெளியீட்டு உரிமையை அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் லியோ ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்