Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சினிமாவை விட்டு முழுமையாக விலக உள்ளதாக தகவல்: காஜல் அகர்வால்

ஜுன் 16, 2023 06:04

சென்னை: நடிகை காஜல் அகர்வால் லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொண்டார். 

அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

 அதையடுத்து அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் இந்தியன் 2 , பாலய்யாவின் பகவத் கேசரி ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த படங்களை முடித்ததும் அவர் சினிமாவை விட்டு முழுமையாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தலைப்புச்செய்திகள்