Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 பஸ் ஸ்டாண்டுக்குள் போகாத அரசு, தனியார் பேருந்தை மடக்கி பிடித்த  எம்எல்ஏ

ஜுன் 14, 2023 12:04

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் டிமிக்கி கொடுத்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளை அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ், மடக்கி பிடித்து அனைத்து பஸ்களையும் பஸ் ஸ்டாண்டுக்குள் போகச் செய்தார்.

மேலும் திருச்சி, திருப்பூர், மதுரை, தேனி உட்பட பல்வேறு தொலைதூர நகரங்களில் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கு வராமல் ஆலய சந்திப்பில் பயணிகளை இறக்கி விட்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொது மக்களின் புகாரின் பேரில் அவ்வப்போது போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ்டாண்டுக்குள் பஸ்களை போக செய்வது வழக்கம். எந்த அதிகாரி கூறினாலும் மதுரையில் இருந்து வரும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் சர்ச் சந்திப்பிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், லக்கேஜ்வுடன் வருபவர்கள் பஸ் ஸ்டாண்டுக்கு மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டியதிருந்தது.

இப்பேருந்தானது சர்ச் சந்திப்புக்கு வந்த அ.திமு.க. எம்எல்ஏ மான்ராஜ் அங்கு நின்று பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் சென்ற அரசு பஸ்களை மடக்கி பிடித்தும்,மதுரையில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ்சை, ரிவர்ஸ் எடுத்து பஸ் ஸ்டாண்டுக்குள் போக செய்தார்.இதனை கேள்விப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எம்.எல்.ஏ. மான்ராஜீடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும் வெளியூர்களில் வரும் அனைத்து அரசு பஸ்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவேன் என அதிகாரியிடம் தெரிவித்தார். இதனைடுத்து போக்குவரத்து துறை சார்பில் ஒரு ஊழியர் நிறுத்தப்பட்டு அனைத்து பேருந்துகளும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்தனர்.

தலைப்புச்செய்திகள்