Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

மே 30, 2023 10:48

தென்காசி: வீரவநல்லூர் பேரூர் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈரண்டை சாட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் அறிஞர் அண்ணா திடலில் பேரூர் கழகச் செயலாளர் வீ .சுப்பையா தலைமையில், வீரவநல்லூர் அவைத்தலைவர் இரா. பழனி, பேரூராட்சி தலைவர் சு.சித்ரா, ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, பேரூர் கழக பொருளாளர் இ முத்துக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் வசந்த சந்திரா,  துணைச் செயலாளர்கள் முத்து ராமலிங்கம், ராமசாமி, விசாலாட்சி மாவட்ட பிரதிநிதிகள் சுப்பு குட்டி, அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எல். வேல்முருகன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஏ. பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் எம். தாமரை செல்வி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வி. எஸ். கணேசா, சிறப்புரை தலைமை கழகப் பேச்சாளர் அம்பை. ராமையா பேசும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என தளபதியார் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்  குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியவர் தமிழக முதல்வர், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, தொழிற் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு, இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கை அறிவிப்பு பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது, சுகாதாரத் துறையை பொருத்தமட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் கணக்கானோர் பயனடைந்துள்ளனர் மற்றும் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதல் 48 மணி நேர மருத்துவச் செலவை அரசே ஏற்கும் விதமாக இன்னுயிர் காப்போம் என்னும் திட்டத்தையையும் நடைமுறைப்படுத்தினார்.  தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தமிழர் விருது போன்ற திட்டங்களும், கடந்த ஈரா ஆண்டில் திமுக அரசால் அறிவிக்கப்பட்டவை  தமிழ் இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமனி விருது, கனவு இல்லம், சிறந்த பத்திரிகையாளர்களை கௌரவிக்க கலைஞர் எழுதுகோல் விருது போன்ற பல்வேறு சாதனைகளை இந்த ஈராண்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கிறது. என பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய பிரதிநிதிகள் அ.வி. அழகியப்பன், க.முத்தையா, பூ.முத்தையா, ஜான், மத்திய வார்டு செயலாளர்கள் சண்முகவேல், சு.வெள்ளப்பாண்டி, அடைக்கலம், இசக்கி, அண்ணாதுரை, கிருஷ்ணன், முகமது உசேன், அரவிந்த், ஸ்ரீரங்கம், கோபாலகிருஷ்ணன் உட்பட அனைத்து வார்டு செயலாளர்களும் செயற்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கல்பனா உட்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கழக முன்னோடிகள் முத்துகிருஷ்ணன், வீ. ராமையா, ஐயம்பெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.     
மேலும் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் ந. பிச்சைக்கண்ணு நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்