Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 நீளம் தாண்டுதல் போட்டி-இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தங்கம்

மே 25, 2023 02:50

கிரீஸ்: ஏதென்சில், சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடந்தது. இதில் களமிறங்கிய இந்திய வீரரான நடப்பு சாம்பியன் முரளி ஸ்ரீசங்கர் 8.18 மீட்டர் நீளம் தாண்டி மீண்டும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். Also Read - மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி மற்றொரு இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.85 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் ஜாலென் ருக்கெர் வெண்கலப்பதக்கமும் (7.80 மீட்டர்) பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்