Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகம் அலுவலர்கள் நலச்சங்க மாநில தலைவர் இல்ல விழா

மே 24, 2023 08:15

கழுகுமலை:தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்க மாநில தலைவர் சுடலைமுத்து அவர்களின் மகள் ஸ்வர்ஷாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா வானரமுட்டி கிளிக்கூண்டு கருப்பசாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், தமிழக தடய அறிவியல் துறை இயக்குநருமான விஜயகுமார் கலந்து கொண்டு ஸ்வர்ஷாவை வாழ்த்தினார். 
நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் கண்ணன், பொருளாளர் செந்தில், தமிழாசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் கணேசன், பசும்பொன் தேவர் அறக்கட்டளை பரமசிவம், ராதாகிருஷ்ணன் மற்றும் அகம் அலுவலர்கள் நலச்சங்க நிர்வாகிகள், ஆசிரியர் பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை மாநில தலைவர் சுடலைமுத்து செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்