Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

மே 23, 2023 08:05

தென்காசி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா, தலைமையில் ஆலங்குளத்தில் உள்ள SSN திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னிலை மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, பாலா கலந்துகொண்டு வழிகாட்டினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ், பாண்டித்துரை,முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன்,கூட்டத்தில் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன்,மாவட்டத் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் முத்துலட்சுமி, பாலா, ஸ்ரீனிவாசன், முத்துக்குமார், பால்ராஜ், பாலமுருகன்,ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் ஒன்றிய அணி பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஐந்து வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மான எண்1:கலிங்கம்பட்டி கிராம பஞ்சாயத்தில் மகாதேவர் பட்டி, முத்து ரெட்டிபட்டி, வேத முத்து நகர், ராம ராஜாபுரம், மரத்தோணி, வீராணபுரம், ஆமாரம்பட்டி, பிள்ளையார் குளம், ஆகிய கிராமங்களுக்கும் இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்களும் கலிங்கப்பட்டியில் உள்ளன. இந்த கிராம மக்கள் அவசர அடிப்படை அத்தியாவசிய தேவை அனைத்திற்கும் கலிங்கம்பட்டி கிராமத்திற்கே வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. 
மக்களின் அடிப்படை உரிமைகளையும் அத்தியாவசிய தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனை தீர்வு கண்டு ஒரு கிராம அலுவலகத்தை கலிங்கம்பட்டி பஞ்சாயத்து மேற்கண்ட  கடைக்கோடி கிராமங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றி வைத்தால் மக்களின் பயண நேரம் தேவையில்லாத அலைச்சல் தவிர்க்கும் பொருட்டு நிர்வாக அலுவலகம் அமைக்க வலியுறுத்துகிறது.
தீர்மான எண் 2: கடையம் ஒன்றியத்தில் விவசாய நிலங்கள் பெருமளவில் குறைந்து கொண்டே வருகின்றன. ஆகவே அடைச்சாணி ஊராட்சியில் விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை வட்டாட்சியரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை ஆகவே இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் வலியுறுத்துகிறது.
தீர்மான எண் 3:தென்காசி மாவட்டத்தில் பல கிராமப்புற பகுதிகளுக்கு பகல் நேரங்களில் சில பேருந்துகளும் இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால்  கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் வியாபார பெருமக்கள் பொதுமக்கள்பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகையால் தமிழக அரசு உடனே கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் வலியுறுத்துகிறது.
தீர்மான எண் 4: தென்காசி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சட்டவிரோதமாக கல் மற்றும் மணல் குவாரிகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை அண்டைமாநிலமான கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலமாக கடத்துகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை மாவட்ட செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மான எண் 5: ஊத்து மலையில் அதிக மக்கள் தொகை உள்ளதால் கிராம ஊராட்சியை  பேரூராட்சியாக உயர்த்த வேண்டும்.ஆலங்குளம் யூனியனில் சுமார் 33 கிராம பஞ்சாயத்து உள்ளதால் வளர்ச்சி திட்டங்கள் அனைவருக்கும் சரியாக போய் சேராமல் இருந்து வருகிறது. எனவே ஊத்துமலை தலைமை இடமாக கொண்டு ஆலங்குளம் யூனியன் இரண்டாக பிரித்து தனி யூனியன் அமைக்கப்பட வேண்டும். என பல்வேறு தீர்மானம் வலியுறுத்தியிருந்தது அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றி உரையாக இச்செய்தி வெளியிட்டுள்ளார் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டரிநாதன்.

தலைப்புச்செய்திகள்