Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜீவா மாண்டிசோரி பள்ளி மாவட்ட அளவில் சாதனை

மே 19, 2023 09:49

ஆலங்குளம்:பிளஸ் 1 தேர்வில் ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.
ஆலங்குளம் ஜீவா  மாண்டிசோரி  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இப்பள்ளி கணிதம் - கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சங்கமித்ரா 600க்கு 591 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், கணக்குப்பதிவியல் - கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு மாணவி ப்ரைசி சொர்ணா 570 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், கணிதம் - கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சந்தியா  569 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.
மேலும், இயற்பியல், வேதியியல் பாடத்தில் மாணவி சங்கமித்ரா, கணக்குப்பதிவியலில் மாணவி ப்ரைசி சொர்ணா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.  தேர்வு எழுதிய  மாணவர்களில்  550 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 500க்கு மேல் 9 பேரும், 450 க்கு மேல் 35 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சௌ.இராதா,  முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ் துணை முதல்வர் சவிதா ஷெனாய், உதவி துணை முதல்வர் மயிலம்மாள் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களும் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்