Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பந்தளம் அரண்மனையை பராமரிக்க  சபரிமலை கோவில் நிர்வாகம்  கோரிக்கை

மே 19, 2023 09:48

தென்காசி:பந்தளம் அரண்மனையை பராமரிக்கவும், பந்தளம் மகாராஜாவின் வாரிசுகளை பாதுகாக்கவும் கேரள அரசு மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு  உரிய நிதி உதவி வழங்க வேண்டும். என பந்தள மகாராஜாவின் வாரிசுகள் சார்பில் வழக்கறிஞர் சரச்சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
தென்காசியை அடுத்த, கீழப்பாட்டாகுறிச்சி பிரம்மா கோவில் நிர்வாகியும், கேரள மாநில வழக்கறிஞருமான சரத் சந்திர போஸ் நிருபர்களிடம் கூறியதாவது.

கேரள மாநிலம் பந்தளத்தில் உள்ள அரண்மனை மணிகண்டன் ஐயப்பன் வளர்ந்த அரண்மனை ஆகும். 850 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனையானது, 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு  13 அறைகள், முற்றங்கள், பூஜை அறை, சமையல் அறை,  வற்றாத கிணறு மற்றும் குளம் உள்ளது.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் சராசரியாக ரூ.350 கோடி வருமானம் வருகிறது. அதே நேரத்தில் ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலை உருவாக்கி, வளர்த்து  பாதுகாத்து வந்த பந்தளம் மகாராஜாவின் வாரிசுகள் மற்றும் அரண்மனையை சார்ந்த 300 உறுப்பினர்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். 
எனவே சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானத்தில் 15 சதவீதத்தை பந்தளம் அரண்மனையின் பராமரிப்பு பணிகளுக்காக  வழங்குமாறு கேரள அரசுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டுக்கும் பரிந்துரைக்கிறேன்.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் ஐயப்பன் திருஆபரண பெட்டி ஊர்வலம் குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில், வழியாக தென்காசி காசி விசுவநாதர் கோவில் வரை வந்து செல்கிறது. இந்த திரு ஆபரணப்பெட்டி  கீழபாட்டாகுறிச்சியில்  ஐயப்பன் பிரம்மசபரி ஐயப்பனாக விரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரம்மலோகம் வரை சென்று வர வழிவகை செய்ய வேண்டும்.மேலும் பந்தளம் அரண்மனை  மற்றும் அதன் சுற்றுப்புறத்தை ஒரு புனித யாத்திரை மையமாக மாற்ற வேண்டும். என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது பந்தளம் மன்னர் கேரள வர்மராஜா, அஜய் குமார்,  சாய் கண்ணன், கோபக் குமார், கீழப்பாட்டாக்குறிச்சி  பிரம்மலோகம் ஒருங்கிணைப்பாளர் கொட்டாகுளம்  இ.இசக்கி பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்