Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.பி.எல். தொடரில் அதிக முறை 200 ரன்களை மேல் குவித்து சென்னை அணி சாதனை

ஏப்ரல் 18, 2023 12:27

பெங்களூரு: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் பேட்டர்கள் பெங்களூர் அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டனர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகவும் பதிவானது.

இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

25-வது முறையாக 200 ரன்களை கடந்த சென்னை அணி பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 226 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 200 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 25-வது நிகழ்வாகும்.

அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது. மொத்தம் 33 சிக்சர் இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் 17 சிக்சர், பெங்களூரு சார்பில் 16 சிக்சர் என்று மொத்தம் 33 சிக்சர் நொறுக்கப்பட்டன.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட முந்தைய அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை சமன் செய்யப்பட்டது.

 

தலைப்புச்செய்திகள்