Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாசுதேவநல்லூரில்   மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஏப்ரல் 18, 2023 12:16

வாசுதேவநல்லூர், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசுதேவநல்லூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வைத்தார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்றார்.

ஆசிரியர்கள் இப்ராஹிம் மூசா, மாரிமுத்து ராமர், மாடசாமி, மருது பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அலோசியஸ் கிறிஸ்டோபர், புளியங்குடி ரோட்டரி சங்க, நிர்வாகிகள் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நவீன், ரவி, முனீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்