Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாறிவரும் சூழலில் வணிகள் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கருத்தரங்கம்

ஏப்ரல் 17, 2023 07:35

நாமக்கல், மாறிவரும் சூழலில் வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் நாமக்கல் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது.


நாமக்கல் ஜேசிஸ் சங்கத்தின் இணை அமைப்பான ஜேகாம் எனும் வணிகம் சார்ந்த கூட்டமைப்பின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. ஜேகாம் அமைப்பின்  தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் கணேசன், செயலாளர் அனிதா, முன்னாள் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜேசிஸ் சங்க பயிற்சியாளர் சண்முகநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாறிவரும் சூழலில் வணிக நிறுவனங்களின் செயல்படுகள் குறித்து பேசினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, வணிகர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளில் சட்டங்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் தங்கள் வியாபாரத்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், வணிகர் சங்கங்களின் அவசியம் குறித்தும் பேசிய அவர், அனைத்து வணிகர்களும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், வணிகர்கள் அவரவர் தொழில் சார்ந்த சங்கங்களில் உறுப்பினராக இணைந்து பாதுகாப்புடன் வணிகத்தை தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, வருகிற மே 5ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கும் 40வது வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஜேகாம் உறுப்பினர்கள் தங்களின் நிறுவனம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினர். முடிவில் பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்