Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல் நெமிலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா

மார்ச் 21, 2023 06:36

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் மேல் நெமிலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மக்கள் நலன் மீது அக்கறையுள்ள ஆட்சி என்பதாலும்  கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவரை நாடி செல்கின்ற நிலையை மாற்றி அனைத்து நிலையிலும் உள்ள மருத்துவர்கள் இன்று மக்களை தேடி வந்து மருத்துவம்பார்க்கின்ற  நிலையை முதலமைச்சர் ஏற்படுத்தி உள்ளதாகவருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தஅமைச்சர் செஞ்சிமஸ்தான் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், ரத்த அழுத்தம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து மாத்திரை அடங்கிய பெட்டகத்தினையும் அவர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்: கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட வருமுன் காப்போம் திட்டத்தினை தமிழகத்தின் முதலமைச்சராகதளபதி மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுடைய நலன்காத்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்நாள் காலம் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட மறைந்த முத்தமிழ் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடந்த உத்தரவிட்டு உள்ளார்கள்.

மேலும் இன்னூயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் மக்கள் நலன் மீது அக்கறை உள்ள ஆட்சி என்பதாலும் அதிலும் கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவரை நாடி செல்கின்ற நிலையை மாற்றி அனைத்து நிலையிலும் உள்ள மருத்துவர்கள் இன்று கிராமத்தில் உள்ள மக்களை தேடி வந்துபல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்எனத் தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.

முகாமில் பொது மருத்துவம், கண், காது ,பல்,மருத்துவம்,ரத்த அழுத்தம், இருதயம், மற்றும் நுரையீரல்,காசநோய்களுக்குவட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். தொடர்ந்து ஆண்கள் கருத்தடை செய்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி துணை சேர்மன்  விஜயலட்சுமி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்மாரியம்மாள், துணைத் தலைவர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்