Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜேடர்பாளையம் அருகே பெண் மர்ம மரணம்  தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் எஸ்.பி எச்சரிக்கை

மார்ச் 15, 2023 03:56

நாமக்கல், ஜேடர்பாளையம் அருகே பெண் மர்ம மரணம் குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என நாமக்கல் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல், மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே, பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.

பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன், விவசாயி. இவரது மனைவி நித்யா (27). சம்பவத்தன்று அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

மாலையில் அங்குள்ள ஓடையின் அருகே முட்புதரில் நித்யா ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்தியாவின் உடலை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, நித்யா மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆஸ்பத்திரி முன்பு சாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு விரைந்து வந்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் நித்யா மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.

அதன் பிறகு இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்றுக் கொண்டுஅவர்கள், மறியலை கைவிட்டு நித்யாவின் பிரேதத்தை பெற்றுச் சென்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 11.03.2023 ம் தேதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரப்பாளையம் கவுண்டன் தோட்டம் அருகில் விவேகானந்தன் என்பரின் மனைவி நித்யா (28), என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது சம்மந்தமாக ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புலன் விசாரணையில் இக்குற்ற செயலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தச் சேர்ந்த சிறார் குற்றவாளி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவ்வழக்கில் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணையில் தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தோடு, தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறாக தவறான கருத்துகளை பரப்பி வருபவர்கள் வருபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்