Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்:

மார்ச் 11, 2023 08:03

பாவூர்சத்திரம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். 


வெஸ்டர்ன் கேட்ஸ் இந்தியன் மன்றம், நேரு யுவகேந்திரா மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா, ஸ்கேட்டிங், சதுரங்க போட்டிகள் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி, ரொக்கப்பரிசு வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, ஒன்றியக்குழு தலைவர் சீ.காவேரி சீனித்துரை, ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், தொழிலதிபர் சேவியர்ராஜன், மருத்துவர் ராஜா, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி. அருள், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி விஜயன், கபில்தேவதாஸ், பயிற்சியாளர்கள் ராம்ராஜ்,முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கணேஷ் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்