Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

பிப்ரவரி 27, 2023 12:35

சேந்தமங்கலம் : சேலம் சரகம் காவல் துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் உள்ள காவல் சிறுவர், சிறுமியர் மனமகிழ் மன்றத்தில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மணவியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமிற்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமை வகித்தார். டாக்டர் மணிகண்டன் பங்கேற்று பள்ளி மாணவ, மணவியர்களுக்கு ரத்த அழுத்தம், கண், காது, கை, கால் ஊனம் ஹிமோ குரோபின் அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து, இரும்பு சத்துள்ள பால், கொய்யா பழம், பச்சை நிறமுள்ள கீரை, காய்கறிகள், முட்டை, பழம் வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

முகாமில் எஸ்.ஐ., சுப்ரமணி, மோகன்ராஜ், தனிபிரிவு போலீசார் ரமேஷ் மற்றும் போலீசார், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்