Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயாபதியில் நடைபெற்ற, ஒருநாள் பீச் மாநில கபடிப்போட்டி!

பிப்ரவரி 06, 2023 01:33

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதியில் நடைபெற்ற, ஒருநாள் பீச் மாநில கபடிப்போட்டி! மொத்தம் 42 அணிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி :- திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 10 மீனவக்கிராமங்களில் ஒன்றான, விஜயாபதி கடலோரக்கிராமத்தில்,  நேற்று (பிப்ரவரி.5) ஒருநாள் பீச் ( BEACH) கபடிப்போட்டி, நடைபெற்றது.

தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின், 46-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், மாநிலம் முழுவதிலும் இருந்து, மொத்தம் 42 அணிகள் பங்கேற்றிருந்தன.

போட்டிகள் அனைத்தும், நாக் அவுட் முறையிலேயே நடைபெற்றன. முதல் பரிசுக்காக, நேற்று (பிப்ரவரி.5) இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பணகுடி சுபாஷ் அணியும், கூடங்குளம் தமிழன் சரத்  அணியும் மோதின. இதில் 21 க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில், பணகுடி அணி வெற்றி பெற்றது.

இது போல மூன்றாவது பரிசுக்காக நடைபெற்ற போட்டியில், கூடல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சென்னை அணியும், மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதல் இடம் பிடித்த, பணகுடி சுபாஷ் அணிக்கு,  20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிக்கோப்பை,  2-ஆவது இடம் பெற்ற கூடங்குளம் தமிழன் சரத் அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிக்கோப்பை,  3-வது இடத்தில் வந்த சென்னை அணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம்,  வெள்ளிக்கோப்பை,  இதற்கு அடுத்து வந்த கூடங்குளம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிக்கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

அவற்றை, முன்னாள் தமிழக சபாநாயகர் இரா. ஆவுடையப்பன்,  திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம் ஆகியோர், இணைந்து வழங்கினர்.

 பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், வள்ளியூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முனைவர் ம.கிரகாம் பெல், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரா.ஆ. பிரபாகரன் ஆகியோர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்