Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

பிப்ரவரி 06, 2023 01:20

சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
இந்தியாவின் சிலம்பாட்ட கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம் பங்கேற்பு

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் சிலம்பம் டிரஸ்ட் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி மையம் சார்பில் மாநில அளவிலான 3வது ஆண்டு சிலம்பாட்ட போட்டி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்தது.

நிகழ்ச்சிக்கு இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்திருக்கும் அருணாச்சலம் மணி ஆசான் தலைமை வகித்தார்.ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசெல்வம், செயலாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் ஆத்திவிநாயகம் வரவேற்றார். இதில் மலைவேல் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சந்திரகுமார் ,அருண் ,ராசு செல்வராஜ் ஆகியோர்  கலந்து கொண்டு பேசினர்.இதில் மதுரை, திண்டுக்கல், தேனி ,திருநெல்வேலி, தென்காசி ,தஞ்சாவூர், கொடைக்கானல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. இது குறித்து கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம் கூறுகையில் 1939 ஆம் ஆண்டு சிலம்பாட்டத்தில் வகுத்த பாரம்பரிய வழியினை பின்பற்றி பழமை மாறாமல் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது என கூறினார். முடிவில் மாஸ்டர் குமார் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்