Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் பேரவை கூட்டம்

ஜனவரி 30, 2023 07:29

தென்காசி : - தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்கம் AICCITU  மாவட்ட பேரவை கூட்டம்   செங்கோட்டையில் சங்க தலைவர் ஜே.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து AICCITU  மாநில தலைவர் சங்கர பாண்டியன் பேசினார்.  ஏ ஐ சி சி டி யூ மாநில செயற்குழு ஐயப்பன், மாவட்ட தலைவர் அயூப்கான் , பொருளாளர் குருசாமி,  மாவட்ட நிர்வாகிகள் முத்துசாமி , தம்பித்துரை, பொட்டுச்செல்வம்,   முத்துலட்சுமி,முருகையா, பேச்சிமுத்து, பிச்சுமணி,  தங்கம், கனகவல்லி  ,ஜோதி மற்றும் தூய்மை பணியாளர் சங்கநிர்வாகிகள் பரமேஸ்வரி, முத்துலட்சுமி, மாரிச்செல்வன்,  கனகராஜ், தமிழரசி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காவலர்கள் பங்கேற்றனர்.

 பேரவை கூட்டத்தை நிறைவு செய்து ஏ ஐ சி சி டி யு தென்காசி மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன் பேசினார் . தென்காசி தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட புதிய நிர்வாகிகள்  கௌரவத் தலைவர் பேச்சி முத்து, மாவட்ட தலைவர்  எம்.வேல்முருகன்,             மாவட்டச் செயலாளர்  சுப்பிரமணியன்,  மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி,             மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துகிருஷ்ணன், தமிழரசி. சின்னத்தம்பி. வெள்ளத்தாய்,  வேலம்மாள், முருகேஸ்வரி,  மயில், மூக்கம்மாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கனகராஜ்,  மாரிசெல்வன், சேர்மகனி, சுந்தரவேல், துர்கா தேவி,                   தேவி,காமாட்சி,குத்தாலிங்கம்  ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 தீர்மானங்கள் தமிழக அரசுமாவட்ட நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி,        ஊராட்சி நிர்வாகங்கள்  AVM காண்ட்ராக்ட் நிர்வாகம் - தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு M 2/ 12587 /30.6.2022 GO படி தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 478. 1-4- 2022 முதல் அரியர்ஸ் உடன்  வழங்கிட வேண்டும்.      

              தூய்மை பணியாளர்கள் காவலர்களுக்கு பணி செய்ய போதுமான கையுறை , காலுறை , முக கவசம் , மண்வெட்டி, கூடை, சோப்பு  ,  செருப்பு , மழைக்கோட்டு, தள்ளுவண்டிகள் , பேட்டரி வண்டிகள் , உடனே வழங்கிட வேண்டும்.

அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தினசரி சம்பளமாக ரூபாய் 600 வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக பணி செய்யக்கூடிய தூய்மை பணியாளர்கள் காவலர்களை  அனைவரையும் நிரந்தரப்படுத்திட வேண்டும்.                             

மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களின் நியமித்திட வேண்டும். தனிநபர் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்திட வேண்டும்.

 கொரோனா காலத்தில் இரவும் பகலுமாக பணி செய்த தூய்மை பணியாளர் காவலர்களுக்கு தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி நிதி ரூபாய் 15,000 உடனே வழங்கிட வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பணி பதிவேடு, சர்வீஸ் புத்தகம் மற்றும் மாதப் பென்ஷன் வழங்கிட வேண்டும். 

குறைந்தபட்ச பணிக்கொடையாக 5 லட்சம் வழங்கிட வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்