Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை பாதுகாப்பு மேம்பாட்டு பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ஜனவரி 25, 2023 01:13

எலச்சிபாளையம்: திருச்செங்கோடு மலை சுத்தி ரோடு செல்லும் சாலை சந்திப்பு அகலப்படுத்தும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட, மலைசுத்தி ரோடு செல்லும் சாலை சந்திப்பினை சாலை பாதுகாப்பு திட்டம் 2021-22ன்கீழ்,  அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி முடிவுற்றது. 

இப்பணியினை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்டம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் சாலையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் துரை, திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்