Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணிமேகலை விருது பெற்ற துவரங்காடு மகளிர் குழுவினருக்கு யூனியன் சேர்மன் பாராட்டு

ஜனவரி 02, 2023 07:02

பாவூர்சத்திரம் : முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற துவரங்காடு மகளிர் குழுவினருக்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பாராட்டு தெரிவித்தார்.


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாநில அளவில் சிறந்த சுய உதவி குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. மணிமேகலை விருது வழங்கப்பட்டது.

இதில் தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த துவரங்காடு முல்லை மகளிர் சுய உதவிக்குழுவான இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கான விருதினை திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருதுடன் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை பாராட்டினார்.

இதில் கீழவெள்ளகால் ஊராட்சி ஊக்குனர் மணிமேகலை, வட்டார இயக்க மேலாளர் மாலதி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் குமுதவல்லி, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்