Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிகை, அழகுகலை உறுப்பினர் சங்கம் சார்பில் காப்பக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கல்

ஜனவரி 02, 2023 12:29

இலஞ்சி குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திருநெல்வேலி-தென்காசி ஆல் இந்தியா சிகை மற்றும் அழகுகலை உறுப்பினர்கள் சங்கம் சார்பில் இலஞ்சியில் அமைந்துள்ள ஆரம்பஜோதி குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஆல் இந்தியா சிகை மற்றும் அழகுகலை சங்கத்தலைவர்கள் அருணா, நாகஜோதி, ஜோதிகனி, புஷ்பா, கோகிலா, பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்