Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்காளதேசத்துக்கு எதிரான வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?

டிசம்பர் 26, 2022 02:01

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. மும்பை, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே அக்ஷர் பட்டேல், உனத்கட், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஷ்வின், ஸ்ரேயஸ் அய்யர் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியை வெற்றி பெறச் செய்தனட். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உடபட்ட தொடர் என்பதால் இந்த தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தனது வெற்றி சதவீதத்தை அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் இந்திய அணி தற்போது 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்லது. நாளை ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு அதிகமாகும். அதனால் இந்த போட்டி இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு மிக முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியப்ஷிப் புள்ளிப்பட்டியல்:-
1.) ஆஸ்திரேலியா - 76.92%
2.) இந்தியா - 58.93%
3.) தென் ஆப்பிரிக்கா - 54.55% 
4.) இலங்கை - 53.33% 
5.) இங்கிலாந்து - 46.97% 
6.) வெஸ்ட் இண்டீஸ் - 40.91% 
7.) பாகிஸ்தான் - 38.89% 
8.) நியூசிலாந்து - 25.93% 
9.) வங்காளதேசம் - 11.11%

தலைப்புச்செய்திகள்