Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நயன்தாரா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

டிசம்பர் 24, 2022 11:23

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 
கனெக்ட் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தலைப்புச்செய்திகள்