Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுதேசி மறைந்து விதேசிகள் மலர்ந்ததால்தான் தற்போது கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்துள்ளது: அண்ணாச்சி முத்துக்குமார்

டிசம்பர் 18, 2022 09:46

திருப்பூர், டிச.18: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆத்திச்செல்வன் தலைமை தாங்கினார்கள். மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், உடுமலைப்பேட்டை வியாபாரி சங்கத் தலைவர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த கூட்டம் முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தலைவர் அண்ணாச்சி முத்துக்குமார் பேசியதாவது:

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையை பொறுத்தவரை முழுவதும் சுதேசிதான். சுதேசி மறைந்து விதேசிகள் மலர்ந்ததால்தான் தற்போது கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. சுதேசிக்காக போராடியவர்களின் நினைவாக மாநாடுகளை நடத்தில் சுதேசி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்.

கடந்த செப்டம்பர் மாதம் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவை நெல்லையில் சிறப்பாக கொண்டாடினோம். அவர் சுதேசிக்காகவே வாழ்ந்தவர். அதே போல் ஜி.டி.நாயுடு கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்ந்தவர். ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை இந்திய அரசாங்கம் அங்கீகரித்திருந்தால் ஜப்பானும் கிடையாது, சீனாவும் கிடையாது. ஆகவே அவருடைய நினைவாக மார்ச் 23ம் தேதி கோவையில் ஒரு விழிப்புணர்வு மாநாடு நடத்தவுள்ளோம். அதில் லட்சக்கணக்கான வணிகர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. வர்த்தக முறையே தற்போது சூதாட்ட மோசடியாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் தொழில் முடக்கம் ஆனதற்கு காரணம் அந்நிய வர்த்தக சூதாட்டம்தான். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அண்ணாச்சி முத்துக்குமார் கூறினார்.

Edit

தலைப்புச்செய்திகள்