Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் இலவச கண் சிகிச்சை முகாம்

டிசம்பர் 08, 2022 11:34

புதுச்சேரி: திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ் மணி, செயலாளர் முகமது அசாருதீன், பொரு ளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தாளாளர் சம்பத் முன் னிலை வகித்தார். புதுவை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்க ளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. 

2 நாட்கள் நடந்த இந்த முகாமில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சையது, பரந்தாமன், ஜீவா பாஸ்கரன் உள்பட திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்