Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்

டிசம்பர் 05, 2022 03:46

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதா நாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற் காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவ ரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மா மன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'தசரா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

இந்நிலையில், இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படக்குழு 'ரகு தாத்தா' படத்தின்  போஸ்டரை வெளியிட்டுள்ள ஹோம் பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் 'புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது' என்று குறிப் பிட்டுள்ளது. மேலும், படக்குழுவினருடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்