Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியாவுடன் இன்று நள்ளிரவு மோதல்

டிசம்பர் 03, 2022 01:03

தோகா: உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங் கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரி விலும் 4 அணிகள் இடம் பெற்றன. நேற்றுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டி னா, போலந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா, கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடு கள் வெளியேற்றப்பட்டன. 'நாக் அவுட்' ரவுண்டான 2-வது சுற்று இன்று தொடங்குகிறது. 2 ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடை பெறும் போட்டியில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. 

நெதர்லாந்து அணி 'லீக்' சுற்றில் தோல்வி அடையவில்லை செனகல் (2-0), கத்தார் (2-0) அணிகளை தோற்கடித்தது. ஈக்வடாருடன் (1-1) டிரா செய்தது. அந்த அணி அமெரிக்காவை வீழ்த்தி கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அமெரிக்க அணியும் தோல்வி அடையவில்லை. இங்கிலாந்து, வேல்சுடன் டிரா செய்தது. ஈரானை வீழ்த்தியது. இதனால் நெதர்லாந்து அணிக்கு அமெரிக்கா கடும் சவால் கொடுக்கலாம். நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் 'சி' பிரிவில் முதல் இடத் தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலி யாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. பின் னர் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலிய அணி பிரான்சிடம் மட்டுமே தோற்றது. துனிசியா, டென்மார்க்கை வீழ்த்தி இருந்தது.

தலைப்புச்செய்திகள்