Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

டிசம்பர் 03, 2022 12:23

மேட்டூர்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவ துமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 12,865 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 10,436 கன அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு விநாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீர் திறக் கப்படுகிறது. வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை 118.59 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 118.52 அடியாக சரிந்தது.
 

தலைப்புச்செய்திகள்