Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருணாச்சல் பிரதேசத்தில் புதிய பசுமை விமான நிலையம்

நவம்பர் 19, 2022 02:00

இட்டாநகர்: அருணாச்சல் பிரதேசம் மாநிலம் இட்டா நகரில் டோனி போலோ என்கிற புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.640 கோடியில், 680 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமானநிலையம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத் தின் தலைநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று புதிய பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த விமான நிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைக் கொண்டு இயங்குகின்றன. 

நவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி இந்த விமானநிலையக் கட்டடிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலைய சேவை வடகிழக்கு மாநிலத்தின் தலைநகரை இணைக்கும். இது மாநில எல்லை மற்றும் மற்ற இந்திய நகரங்களுடன் வணிக விமானங்கள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் இணைக்கும். மேலும், ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தலைப்புச்செய்திகள்