Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைரலாகும் கனெக்ட் படத்தின் டீசர்

நவம்பர் 19, 2022 01:27

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகி யுள்ளது. திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்