Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்பாத்தியில் 3 கோவில்களின் தேரோட்டம்

நவம்பர் 17, 2022 01:12

கேரளா: பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார பூஜை நடை பெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாள்தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 3-து நாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் 2 கோவில்களை சேர்ந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. கோவிலை ஊற்றி தேரோட்டம் நடந்து, பின்னர் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் சங்க மம் ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்