Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு

நவம்பர் 16, 2022 12:35

சென்னை:  சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,940 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,960 ஆக உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து உள்ளது. நேற்று தங்கம் பவுன் ரூ.39,520-க்கு விற்பனை ஆனது. இன்று இது பவுன் ரூ.160 அதிகரித்து ரூ.39,680 ஆக விற் பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. கிராம் ரூ.68.50-ல் இருந்து ரூ.67.50 ஆகவும் கிலோ ரூ.68.500-ல் இருந்து ரூ.67,500 ஆகவும் குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்