Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களை அதிகம் தாக்கும் புற்று நோயை சரி செய்வது எப்படி?

நவம்பர் 12, 2022 05:51

இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகை களை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கி றார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை. இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். 

ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளா கிறார்கள்’’ என்கிறார். இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற் படுதல் உள்ளிட்டவை கர்ப் பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்று நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபிபோன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
 

தலைப்புச்செய்திகள்