Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதுமையை தவிர்ப்பது எப்படி?

நவம்பர் 12, 2022 05:43

முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்சுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம், இளமையை தக்கவைக்கிறது. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது. உடற்பயிற்சியே இளமையை தக்கவைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு பழக்கம்:
நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு உட்கொள்ள வேண்டும். உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு, புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். "ரெட்மீட்" உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினசரி 3 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடற் பயிற்சி:
உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.

தியானம்:
தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆழ்ந்த தியானத்தில் இருப்பது மன நிம்மதியை தருவதோடு மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் தரும்.

தலைப்புச்செய்திகள்