Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10% இடஒதுக்கீடு தீர்ப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வி.கே.சசிகலா

நவம்பர் 08, 2022 11:21

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில், 3 நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பி னரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி வி.கே.சசிகலா தற் போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தீர்ப்பு சமூகநீதி அரசியலில் அடித்தளமாக இருக்கிற தமிழ்நாட்டில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.இந்த தீர்ப்பால் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு விரோதத்தை உண்டாக்கிவிடும் என்றும் தீர்ப்பில் தெரிவித்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு செய்வதால் தேவையற்ற குழப் பங்கள் ஏற்படக்கூடும். ஒருவருடைய பொருளாதார நிலை கண்டிப்பாக மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அது நிலையானதாக கருத முடியாது. எனவே, அதனை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு செய்யும்போது, அது எவ்வாறு நியாயமானதாக இருக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் விடா முயற்சியால் பல்வேறு சட்ட போராட்டங் களை சந்தித்து பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அதனை இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தள்ளார். இதன் மூலம் சமூக ரீதியில் பின்தங்கியவர்கள் பெரிதும் பலனடைந்து வருகின்றனர் என குறிப்பிட்டள்ளார். 

எனவே, திமுக தலைமையிலான அரசு சமூக ரீதியாக பின்தங்கிய வர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த சட்ட ஆலோசனைகளை பெற்று, உரிய சட்ட போராட்டங்களை முன்னெடுத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்