Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 பா.ஜ.க. சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  

அக்டோபர் 01, 2022 05:37

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள, இ-சேவை மையங்களை விரைவில் திறக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது. அதில் இது குறித்து நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் துறை மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில், M.G.N.R.E.G.S. திட்டத்தின் கீழ், சுமார் 150 க்கும் மேற்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவை திறக்கப்படாமல், இ-சேவை மையங்கள் செயல்படாமல் உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பிப்பு, வாரிசு சான்றிதழ், மின் கட்டணம் செலுத்துதல், ரயில் முன் பதிவு போன்ற சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட இ-சேவை மையக்கட்டிடங்களை விரைவில் திறந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்