Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

அக்டோபர் 01, 2022 05:16

நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ், சங்கத்தின் செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மோட்டாா் வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது.  சட்டப் பேரவையில் இதற்கான தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் தினசரி 5 லிட்டர் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும். கேரளாவை போன்று ஆட்டோவிற்கு இணையவழி செயலியை ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட, மாநில எல்லையில் குறிப்பிட்ட தூரம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தலைப்புச்செய்திகள்