Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 மாத்தில் ஆர்டர்லியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

ஆகஸ்டு 23, 2022 01:18

சென்னை:  போலீசில், 'ஆர்டர்லி' முறையை நிறுத்த, அரசும், டி.ஜி.பி.,யும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது.

அப்போது, அவர் 'டி.ஜி.பி.,யின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆர்டர்லி முறையை ஒழிக்க, அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து, விசாரணையை, வரும் 23க்கு, நீதிபதி தள்ளி வைத்தார். இதையடுத்து இன்று(ஆக.,23) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், 4 மாத்தில் ஆர்டர்லியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு அலுவலக உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம். ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுவதாக வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். போலீஸ் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்