Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்.எல்.சி.நிறுவன பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

ஜுலை 30, 2022 05:41

சென்னை: என்.எல்.சி.நிறுவன பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பட்டிருப்பதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.

என்.எல்.சி. பொறியாளர் பணியிடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் என விமர்சித்துள்ளார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணி வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அளித்து வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர பணி இடங்களில் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்.எல்.சி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 பொறியாளர்கள் 299 பேர் பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகும்.

சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகத்தில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்திற்கு வட மாநில இளைஞர்களைக் கொண்டுவந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி பொறியாளர்கள் 299 பேருக்கும் ஆகஸ்ட் 1 இல் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை புதியதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்.எல்.சி. நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்புச்செய்திகள்