Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் கொழும்பில்  ஊரடங்கு

ஜுலை 14, 2022 02:04

கொழும்பு, பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்று பகல் 12 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுருந்தார்.

மேலும், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுருந்தார்.

தலைப்புச்செய்திகள்